வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

திருப்பதி ஜனவரி 8-
ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யு ம் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக குவிந்தனர்.