அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

சென்னை: ஜனவரி 10-
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது
இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது
கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும்
பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.