டெல்லி பொங்கல் விழாவில் மோடி

புதுடெல்லி,ஜனவரி 13-
புதுடெல்லியில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டையுடன் பங்கேற்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 14) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார்.
அமைச்சரின் இல்ல வளாகம் முழுவதும் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து ₹கொள்ள உள்ளனர்.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லம் வெகு ஜோராக மின்னி கொண்டிருக்கிறது.. கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழகக் கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது… நாளைய தினம் பொங்கல் விழா கொண்டாட உள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது.
பொங்கல் பண்டிகை அந்தவகையில் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.. எல் முருகன் இல்லம் அதற்கு முந்தைய ஆண்டு 2024 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் பங்கேற்ற பிரதமர் மோடி திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்ததும் தமிழக மக்களை ஈர்க்க செய்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பிரதமருடன் இணைந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். நாளை 14 ம் தேதி புதன்கிழமையில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவிற்காக எல். முருகன் இல்லம் கரும்பு, மஞ்சள், வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக கிராமிய மணம் கமழும் வகையில் தயாராகி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பங்கேற்று மண்பானையில் பொங்கலிடும் நிகழ்வைப் பார்வையிட உள்ளார். தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது