
சென்னை: ஜனவரி 14-
நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.
தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது.
28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை
குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது.அதன்
தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
















