நண்பனை கொன்ற நண்பர்கள் கைது

பெங்களூரு, ஜனவரி 21-
மாகடி தாலுகாவின் வஜரஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நண்பர்கள் குழு ஒன்று மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட சென்றது. ஒரு தென்னந்தோப்பில் அமர்ந்து இவர்கள் மது குடித்தனர். அப்போது இளநீரை மதுவில் கலந்து குடிக்க ஆசைப்பட்டனர். அதைத்தொடர்ந்து வினோத்குமார் என்ற நண்பர் சரசர வென்று தென்னை மரத்தில் ஏறினார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரது முதுகுத்தண்டு உடைந்தது. இதைப் பார்த்து போதையில் இருந்த நண்பர்கள் பயந்து உள்ளனர். வினோத்குமார் வீட்டில் தெரிந்தால் என்ன ஆகும் மிகவும் பயந்து இருக்கிறார்கள் மேலும் வினோத்குமாரின் சிகிச்சைக்கு அதிகம் செலவு ஆகும் அதை நாம் தான் கட்ட வேண்டி இருக்கும் என்றும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து
வஜரஹள்ளி அருகே உள்ள ஏரியில் வினோத்குமார் உடலை தூக்கி போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றுள்ளனர். மறுநாள் போய் பார்த்த போது அவரது உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர் அந்த உடலை எடுத்து பெரிய கல்லை வயிற்றில் கட்டி மீண்டும் போட்டுள்ளனர்.
வினோத் குமார் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கூடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
வழக்கைப் பதிவு செய்த போலீசார் உன்னிப்பாக விசாரித்து, நண்பர்களால் கொலை செய்யப்பட்டதன் ரகசியத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சுதீப் மற்றும் பிரஜ்வால் ஆகியோர் அனைவரும் மகடி தாலுகாவில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது சுதீப் மற்றும் பிரஜ்வாலை கைது செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.