மின் விநியோக கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கி.மீ. கடந்து சாதனை

புதுடெல்லி: ஜனவரி 23-
இந்தியாவின் மின் விநி​யோகக் கட்​டமைப்பு 5 லட்​சம் சர்க்​யூட் கிலோமீட்​டர் எனும் மைல்​கல்​லைக் கடந்து புதிய வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளது.
இது குறித்து மத்​திய மின் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: நாட்​டின் மின் விநி​யோகக் கட்​டமைப்​பு, 220 கிலோவோல்ட் மற்​றும் அதற்​கும் அதி​க​மான உயர் அழுத்த மின்​சா​ரத்​தைக் கொண்டு செல்​லும்
திறன் கொண்ட 5 லட்​சம் சர்க்​யூட் கிலோமீட்​டரை கடந்​துள்​ளது. மேலும், மின் மாற்​றும் திறன் 1,407 ஜிகாவோல்ட் ஆம்​பிய​ராக அதி​கரித்​துள்​ளது.
ராஜஸ்​தான் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மண்​டலத்​திலிருந்து மின்​சா​ரத்​தைக் கொண்டு செல்​வதற்​காக,
பத்​லா-II முதல் சீகர்​-II துணை மின்​நிலை​யம் வரை 765 கி.வோ. திறன் கொண்ட 628 சர்க்​யூட் கி.மீ. மின் விநி​யோகப் பாதை பயன்​பாட்​டுக்கு வந்​ததையடுத்து இந்த சாதனை
மைல்​கல் எட்​டப்​பட்​டது.
1,100 மெகா​வாட் இந்த மின்​பாதை பயன்​பாட்​டுக்கு வந்​ததன் மூலம், பத்​லா, ராம்​கர் மற்​றும் பதேகர் சூரிய சக்தி வளாகங்​களில் இருந்து கூடு​தலாக 1,100 மெகா​வாட் மின்​சா​ரத்தை விநி​யோகிக்க முடி​யும்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முதல் தற்​போது வரை, நாட்​டின் மின் விநி​யோகக் கட்​டமைப்பு 71.6 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​துள்​ளது. கடந்த பத்​தாண்​டு​களில் 2.09 லட்​சம் சர்க்​யூட் கி.மீ. நீளத்​திற்கு மின் விநி​யோகப் பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.
மேலும், மின் மாற்​றும் திறன் 876 ஜிகாவோல்ட் ஆம்​பியர் உயர்ந்​துள்​ளது.
தற்​போது பிராந்​தி​யங்​களுக்கு இடையே​யான மின் பரி​மாற்​றத் திறன் 1,20,340 மெகா​வாட்​டாக உள்​ளது.
இது ‘ஒரே தேசம் – ஒரே மின்​கட்​டமைப்பு – ஒரே அலை​வரிசை’ என்ற தொலைநோக்​குப் பார்​வையை வெற்​றிகர​மாக நனவாக்​கி​யுள்​ளது.