பதறும் பாகிஸ்தான்.. இந்தியா கொடுத்த அடி அப்படி

இஸ்லாமாபாத்: ஜனவரி 23-
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்திருந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் கடந்த 9 மாதங்களாகவே எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற ரேஞ்சுக்கு ஏதேதோ செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானை எப்படி மொத்தமாகக் காலி செய்துள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்! காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு நிஜமாகவை கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை.இந்தியா கொடுத்த அடி இந்தியாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு 9 மாதங்களில் பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்துப் பார்த்துவிட்டது. இந்தியாவில் இருந்து தூதர்களை அழைப்பது,
ஐநாவுக்கு கடிதங்கள் எழுதியுள்ளது, உலக தலைநகர்களுக்குப் பிரதிநிதிகளை அனுப்புவது, அனைத்துச் சர்வதேச மன்றங்களையும் நாடுவது என அனைத்தையும் செய்துவிட்டது.
பாகிஸ்தான் இவ்வளவு வேகமாக இதற்கு முன்பு செயல்பட்டதே இல்லை. பாகிஸ்தானை அடிக்க வேண்டிய இடத்தில் இந்தியா சரியாக அடித்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. திணறும் பாகிஸ்தான் உண்மையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும் என்பதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவே இல்லை. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் பாகிஸ்தான் தனது நீர் பாசனத்திற்குப் பெரும்பாலும் சிந்து நதிநீர் அமைப்பைச் சார்ந்துள்ளது. அதன் விவசாயத்தில் 80 முதல் 90 சதவீதம் சிந்து நீரை நம்பியுள்ளது. சிந்து நீர் இல்லை என்றால் கைவசம் வெறும் 30 நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே இருக்கும். தர்பேலா, மங்களா போன்ற முக்கிய அணைகளும் கிட்டத்தட்ட காலியாகிவிடும்.
இது பாகிஸ்தானைப் பலவீனமாக மாற்றி இருக்கிறது.பாகிஸ்தான் பதறி அடித்துக் கொண்டு எதிர்வினையாற்ற இதுவே காரணம்.
இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்புக் குழு தண்ணீரை முக்கிய தேசிய நலன் என அறிவித்தது. மேலும், சிந்து நீருக்கு இடையூறு செய்தால் அது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் எச்சரித்தது..
பாகிஸ்தான் நாடாளுமன்றமும் இது குறித்து எச்சரித்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பொய் சொல்லும் பாகிஸ்தான் மேலும், இது ஏதோ சர்வதேச பிரச்சினை போலவும் பாகிஸ்தானுக்கு இந்தியா துரோகம் இழைத்துவிட்டது என்பது போலவும் ஒரு இமேஜ்ஜை கட்டமைக்கப் பிரச்சாரத்தையும் பாகிஸ்தான் தொடங்கியது. ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உலக வங்கி என எந்த மன்றத்தையும் பாகிஸ்தான் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றிலும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றது. இது பேரழிவு என்றும் 240 மில்லியன் உயிர்கள் ஆபத்தில் தள்ளும் என்றும் கூறியது. அதேநேரம் இங்கு நாம் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.
இந்தியா எந்தவொரு இடத்திலும் பாகிஸ்தானுக்குப் போகும் நீரை வேண்டும் என்றே தடுக்கவில்லை. பல முறை எச்சரித்தும் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தது. இதன் விளைவாகவே பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற அடிப்படையிலேயே பாகிஸ்தானுக்குப் போகும் நீரை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.