ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜனவரி 23 –
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலா​ளர்​கள் பங்​கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார்.அப்​போது அவர் கூறிய​தாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புச் சட்​டத்​தின் நோக்​கம் ஏழைகளுக்கு உரிமை​களை வழங்​கு​வ​தாக இருந்​தது. இத்​திட்​டத்​தின் அடிப்படையே ‘உரிமை’ என்ற வார்த்​தை​தான். தற்​போது புதிய ஊரக வேலை சட்டத்தின் மூலம் உரிமை என்ற அடிப்​படை கருத்தையே முடிவுக்கு கொண்டு வரமோடி மற்​றும் பாஜக அரசு விரும்​புகிறது.
இதைப் போலத்​தான் 3 ஆண்​டு​களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்​களைக் கொண்டு வந்து விவ​சா​யிகளுக்கு அழுத்​தம் கொடுத்​தனர். அப்​போது விவ​சா​யிகளை கஷ்டப்​படுத்​தி​யதைப் போலவே தற்​போது தொழிலா​ளர்​களுக்கு தொந்​தரவு தருகின்றனர். நாம் அழுத்தம் தந்ததன் விளைவாக வேளாண் சட்டத்தை பாஜக ரத்து செய்தது. விவசாயிகளுக்கு எதிரான அதே அடக்கு முறையை தொழிலாளர்கள் மீது பாஜக தற்போது பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.