காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு: ஜனவரி 24-
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து ஜம்மு காவல்துறை ஐ.ஜி பீம் சென் துதி கூறும்போது, ‘‘கதுவா மாவட்டத்தில் உள்ள பிலாவர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உஸ்மான் என தெரியவந்தது. அவரிடமிருந்து எம்4 தானியங்கி துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன’’ என்று தெரிவித்தார்.