ரஷ்யாவை முடக்கிய டிரம்ப்.. புதினின் அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா

மாஸ்கோ, ஜன. 24- அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெரிய அளவில் சரிவை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதோடு ரஷ்யாவிடம் இருந்து ஒவ்வொரு நாடுகளும் விலக வேண்டும் என்று மிரட்டி வரும் நிலையில் இந்தியாவும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளது. இதனால் ரஷ்யா பெரும் சிக்கலை எதிர்கொள்ள உள்ளது. உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோபத்தில் உள்ளது.
போரை நிறுத்த டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் இன்னும் சக்சஸ் ஆகவில்லை. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு டிரம்ப் 25 சதவீத வரியை போட்டார். ரஷ்யா கச்சா எண்ணெய் வருமானத்தில் உக்ரைன் போரை தொடர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். மீறும் நாடுகளுக்கு 500 சதவீதம் அளவுக்கு வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து டிரம்ப் கொடுக்கும் அழுத்தம் பிற நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் ஜனவரி மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது, இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தடைகள், அத்துடன் இந்தியாவின் கொள்முதல் குறைப்பு போன்ற காரணங்களால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ஜனவரி மாதத்தில் ரஷ்ய நாட்டி கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் ஏற்றுமதி வருவாய் 46 சதவீதம் வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த நான்கு மாதங்களில் ரஷ்யா கண்டிராத மிகக் குறைந்த ஏற்றுமதி ஜனவரியில் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யா இப்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 3.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அந்நாடு பதிவு செய்த மிக குறைந்த ஏற்றுமதி அளவாகும். கிறிஸ்துமஸ்க்கு முந்தைய காலத்தில் இருந்தே ரஷ்யாவின் தினசரி ஏற்றுமதி சுமார் 700,000 பேரல்கள் வரை குறைந்தது. ஜனவரி 11ல் முடிவடைந்த வாரத்தை ஒரு நாளைக்கு 260,000 பேரல்கள் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா தன்னிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதனை விநியோகிப்பதில் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் தான் காரணம். ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளராக இந்தியா உள்ளது. தற்போது இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில்,
இந்தியாவுக்கான ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி வருவாயைப் பாதித்து அந்த நாட்டுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.