
மும்பை, ஜன. 24- மும்பை அந்தேரி பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டதாக நடிகர் கமல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் துப்பாக்கியால் சுட்டது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் குடியிருப்புவாசிகளை அதிரவைத்தது. ஒஷிவாரா குடியிருப்பில் இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் சத்தம் கேட்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? என்று தெரியாததால் மும்பை முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடிகர் கமல் கான் கைது தடயவியல் சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பிரபல நடிகர் கமல் ஆர். கான் என்பது கண்டறிந்தனர். இதையடுத்து, கமல் ரஷித் கான் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது ஒஷிவாரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உரிமம் பெற்று கமல் கான் துப்பாக்கி வைத்துள்ளதாகவும், இந்த துப்பாக்கியால் அவர் 18 ஆம் தேதி சுட்டு இருப்பதாகவும் முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு தெரிவித்தனர். கமல் கானின் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒஷிவாராவில் உள்ள நளந்தா குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நடிகர் கமல் கானிடம் தீவிர விசாரணை ஒரு குண்டு இரண்டாவது தளத்திலும் மற்றொரு குண்டு 4வது தளத்திலும் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ஒரு பிளாட் இயக்குநர் ஒருவருக்கும் மற்றொரு பிளாட் மாடல் ஒருவருக்கும் சொந்தமானதாகும். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று யார் இதை செய்தது என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் தவித்தனர்.





















