“மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்” – மோடி பெருமிதம்

புதுடெல்லி, ஜன. 26- “நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ‘மன​தின் குரல்’ (மன் கி பாத்) 130-வது வானொலி நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று உரை​யாற்​றிய​தாவது: எனதருமை நாட்டு மக்​களே… நாளை 26-ம் தேதி இந்​தி​யா​வின் 77-வது குடியரசு தின விழாவை சிறப்​பாகக் கொண்​டாடு​கிறோம். இந்த தினத்​தில்​தான் அரசி​யலமைப்​புச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அரசி​யலமைப்பு சட்​டத்தை உரு​வாக்​கிய பெருந்​தலை​வர்​களுக்கு மரி​யாதை செலுத்​து​வோம். இன்​றைய தினம் (ஜன.25) கூட சிறப்பு வாய்ந்த நாள்​தான். இன்​று​தான் தேர்​தல் ஆணை​யம் உரு​வாக்​கப்​பட்​டு, ஆண்​டு​தோறும் தேசிய வாக்​காளர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்த சிறப்​பான தினத்​தில் 18 வயது நிரம்​பிய முதல் முறை வாக்​காளர்​களுக்கு ஒன்று சொல்​கிறேன். வழக்​க​மாக 18 வயதை அடை​யும் போது வாழ்க்​கை​யில் அது​வும் ஒரு சாதாரண நிகழ்​வாக கருதப்​படு​கிறது. ஆனால், ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் இந்த வயது ஒரு மைல்​கல்.தேர்​தல் ஜனநாயக செயல்​பாடு​களில் முதல் முறை வாக்​காளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் பங்​கேற்று வாக்​களிக்க வேண்​டும். இந்​திய ஜனநாயகத்​தின் ஆன்​மா​வாக இருப்​பவர்​கள் வாக்​காளர்​கள். நமது இந்​தி​யச் சமூகம் மலேசி​யா​வில் கலாச்​சா​ரம், பண்​பாட்டை போற்றி வரு​கின்​றனர். அங்கு 500-க்​கும் மேற்​பட்ட தமிழ்ப் பள்​ளி​கள் உள்​ளன.