
பெங்களூர்: ஜனவரி 26-
கர்நாடக மாநிலம் பெங்களூர் எம்ஜி ரோட்டில் உள்ள மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரையாற்றினா.அப்போது அவர் கூறியதாவது, பிராந்திய வேறுபாடுகளை களைய மாநில அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் கூறினார்.
இதன் மூலம் மாநிலத்தில் சமூக மற்றும் அரசியல் உயிர்ச்சக்தி வெளிப்பட்டு வருவதாக அவர் கூறினார்.அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசியல் சமூக பொருளாதார முன்னேற்ற பாதையில் செல்கிறது மக்களிடையே நல்லிணக்கம் வளர்ந்து வர அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கர்நாடக மாநில மக்கள் தேசிய உணர்வுடன் நாட்டின் வளர்ச்சிக்கு தமது பெரும் பங்களிப்பை செய்து வருகின்றனர் என்று கவர்னர் குறிப்பிட்டார்குடியரசு தின விழா முன்னிட்டு மானசா அணிவகுப்பு மைதானத்தில் கண் கவர் அணி வகுப்புகள் நடந்தது கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தேச உணர்வை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது வீர சூர சாகச நிகழ்சிகளும் நடத்தப்பட்டது. குடியரசு தின விழா முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது பெங்களூர் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெங்களூர் தவிர கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்கள் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் உற்சாகமுடன் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்











