பில்கேட்ஸ்-க்கு கள்ளத்தொடர்பு எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணத்தில் பகீர்

வாஷிங்டன், ஜன. 31- அமெரிக்காவை உலுக்கி வரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சார்ந்த ஆவணங்கள் அடுத்தடுத்து வெளியாகி புயலை கிளப்பி வருகின்றன. நேற்று 30 லட்ச பக்க ஆவணங்கள் வெளியாகின. அதில் பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ்க்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது. அமெரிக்காவின் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள், அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உள்ளிட்டோருடன் ஜெஃப்ரின் எப்ஸ்டீனுக்கு நல்ல நட்பு இருந்தது. மேலும் டிரம்ப், ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் மற்றும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகியது. அதுமட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டடில் ஜெஃப்ரீன் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களை (எப்ஸ்டீன் பைல்கள்) அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 3 மில்லியனுக்கும் (30 லட்சம்)அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ்க்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.