மத்திய பட்ஜெட் மிகவும் மந்தமானது: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: பிப்ரவரி 2-
மத்​திய அரசின் பட்​ஜெட் மிக​வும் மந்​த​மான பட்​ஜெட்​டாக இருப்​ப​தாக முன்​னாள் மத்​திய நிதி​யமைச்​சரும், காங்கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரு​மான ப.சிதம்பரம் தெரிவித்​துள்​ளார்.பட்​ஜெட் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்பரம் கூறி​யிருப்​ப​தாவது: வேலை வாய்ப்​பின்​மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, நாட்​டின் முன் எழுந்​துள்ள பல சவால்​களை மத்​திய நிதி அமைச்​சர் கவனத்​தில் கொள்ளவில்​லை. ரூபா​யின் மதிப்பை வலுப்​படுத்த எந்த நடவடிக்கை​யும் பட்​ஜெட்​டில் குறிப்​பிடப்​பட​வில்​லை.
முக்​கிய​மான துறை​களுக்​கான ஒதுக்​கீடு மற்​றும் செலவினம் குறைந்​துள்​ளது. மத்​திய அரசின் மூலதனச் செலவு குறைந்​துள்​ளது. ஜல்​ஜீவன் திட்​டத்​துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடி​யில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. வேலை வாய்ப்பு நிலவரங்​கள் கவலை அளிப்​ப​தாகவே உள்​ளன.
எதிர்​பார்ப்​பு​களுக்கு சற்​றும் ஈடுகொடுக்காத மந்​த​மான பட்​ஜெட்​டாக இருக்​கிறது.
இதை மந்​த​மான பட்​ஜெட் என்றே சொல்​லலாம்.
நாட்​டின் உண்​மை​யான நெருக்​கடி விஷ​யங்​களுக்கு பட்ஜெட்டில் எந்​தப் பதி​லும் இல்​லை.
வேலை​யில்​லாத இளைஞர்​கள், உற்​பத்தி வீழ்ச்​சி, முதலீட்​டாளர்​கள் மூலதனத்தை திரும்​பப் பெறு​தல், வீட்டு சேமிப்பு வீழ்ச்​சி​யடைதல், துயரத்​தில் இருக்​கும் விவ​சா​யிகள் உள்​ளிட்ட நாட்​டின் உண்​மை​யான சவால்​களை மத்​திய அரசு கவனிக்​க​வில்​லை.
இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.முன்​னாள் மத்​திய அமைச்​சர் சசி தரூர் கூறும்​போது, “நாட்டில் தலை​விரித்​தாடி வரும் வேலை​வாய்ப்​பின்மை பிரச்​சினை குறித்து பட்​ஜெட்​டில் எந்​த​வித பதி​லும் இல்லை. நடுத்தர வர்க்​கத்​தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்​சினை​கள் குறித்து பட்​ஜெட்​டில் எந்தவித அறி​விப்​பும் இல்​லை.
மேலும் மாநில வளர்ச்​சிகளுக்​காக பட்​ஜெட்​டில் ஒன்​றுமே செய்​யப்​பட​வில்​லை” என்​றார்​.