ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் கட்சிகள்

இஸ்லாமாபாத்:பிப்ரவரி 5- பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 50 சதவீதமாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் 18 ஆக இதன் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதன் மூலம் இந்திய உற்பத்தி பொருட்களை அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.
இதனால், இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் இது பெரும் பயனளிப்பதாக இருக்கும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அண்டை நாடுகளில் சீனா, பாகிஸ்தானை விட குறைந்த வரியில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் என்னவெல்லாம் தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது. இந்தியா அதை விட ஒரு சதவீதம் குறைவான வரி விகிதத்தில் ஒப்பந்தம் கையெழுத்து இட்டு இருப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. அழையா விருந்தாளி போல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்டு டிரம்பிற்கு வலிய சென்று ஆதரவு கொடுத்தார். அழையா விருந்தாளி போல ஷெபாஸ் ஷெரீப் பல நேரங்களில் நடந்து கொண்டார். டிரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி டிரம்ப் அறிவித்த காசா அமைதி வாரியத்தில் இணைந்தது வரை, அமெரிக்காவை எப்பெடியால்லாம் தாஜா செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி அந்த நாட்டிற்கு ஆதரவு கொடுத்தது.
ஆனாலும் வரி விவகாரத்திலும் இந்தியாவுடன் தோற்றுப் போயிருப்பது ஷெபாஸ் ஷெரீப் மீதான கடுமயான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.