
சென்னை: பிப்ரவரி 11-
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என
இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து,
கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம்
விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
















