பிரதமரின் ஆதரவுக்குப் பிறகும் வட மாநிலங்களில் தமிழுக்குச் சிக்கல்!

புதுடெல்லி, பிப். 12- தமிழ்​நாடு அரசின் தமிழ் வளர்ச்​சித் துறை சார்​பில் தமிழை வளர்ப்​ப​தற்​காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்​நாட்​டுக்கு வெளி​யே​யும் தமிழ் பாடங்​கள் நடத்த குறிப்​பிட்ட தொகை வைப்பு நிதி​யாக அளிக்​கப்​பட்​டுள்​ளது.
இதன் கீழ் அசாம், உ.பி., ஆந்​தி​ரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்​களில் உள்ள பல்​கலைக்​கழகங்​களில் தமிழ் போதிக்கப்படு​கிறது. கடந்த 1977- 78 நிதி​யாண்​டில் தலா ரூ.3 லட்சம் நிதி​யுத​வி​யுடன் வாராணசி​யின் பழமை​யான 3 பல்கலைக்கழகங்​களில் தமிழ் பாடங்​கள் போதிக்க முடிவு செய்யப்​பட்​டது. இவற்​றில் பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம் (பிஎச்​யு) மட்​டுமே சில ஆண்​டு​கள் இடைவெளிக்கு பிறகு மீண்​டும் தமிழை போதிக்​கிறது. சம்​பூர்​ணானந்த் சம்​ஸ்​கிருதப் பல்​கலைக்​கழகம், காசி வித்யாபீடம் ஆகிய​வற்​றுக்கு நிதி அளித்​தும் பலன் இல்​லை. ஆந்திரா​வின் குப்​பம் நகரின் திரா​விடன் பல்​கலைக்​கழகம், திருப்பதி ஸ்ரீவெங்​கடேஸ்​வரா பல்​கலைக்​கழகத்​தி​லும் தமிழ் பேராசிரியர்​களுக்​கான 4 பணி​யிடங்​கள் காலி​யாகவே உள்ளன.இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் தமிழ் வளர்ச்சித்துறை முன்​னாள் இயக்​குநரும், தமிழ் வளர்ச்​சிக் கழகத் தலை​வரு​மான கணை​யாழி மா.இ​ராசேந்​திரன் கூறுகை​யில்,
“சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தில் இந்​தி, சம்​ஸ்​கிருதம் உள்​ளிட்ட வடமொழிகளுக்​காக தமிழ்​நாடு அரசே செல​விடு​வது போல், பிற மாநிலங்​களில் தமிழ் போதிக்க அந்​தந்த மாநில அரசுகளே முன்வர வேண்​டும். மேலும், காசி தமிழ்ச் சங்​கமம் 4.0-​வில் வாராணசி பள்​ளி​களில் பிரதமர் நரேந்​திர மோடி யோசனை​யின் பேரில் குறுகிய நாட்களுக்​காக தமிழ் மொழி கற்​பிக்​கப்​பட்​டது. கூடு​தலாக ஏற்கெனவே உ.பி. உள்​ளிட்ட மாநில உயர்​கல்வி நிலை​யங்​களில் போதிக்​கப்​பட்ட தமிழுக்​கான தடையை பிரதமர் மோடி தலையிட்டு நீக்​கலாம்” என்​றார். சுதந்திரம் அடைந்த பிறகு நாட்​டின் மத்​திய பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடங்​கள் போதிக்க மத்​திய அரசு முடிவு எடுத்​தது. இதன் பலனாக,
உபி., பஞ்​சாப், டெல்லி மற்றும் கேரளா​வின் மத்​திய பல்​கலைக்​கழகங்​களில் நவீன இந்திய மொழிகள் துறை எனும் பெயரில் தமிழ் உள்​ளிட்ட அனைத்து இந்​திய மொழிகளுக்​காக​வும் துறை​கள் தொடங்கப்பட்டு செயல்​படு​கின்​றன.