2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி

அகமதாபாத், பிப். 12- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி 2-வது சூப்​பர் ஓவரில் போராடி வெற்றி பெற்​றது. அகம​தா​பாத்​தின் நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று காலை நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்கள் குவித்​தது. தொடக்க வீரரும் கேப்​ட​னுமான எய்​டன் மார்க்​ரம் 5 ரன்களில் ஃபசல்​ஹக் ஃபரூக்கி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் ரியான் ரிக்​கெல்​டன், குயிண்​டன் டி காக்குடன் இணைய பவர்​பிளே​வில் 43 ரன்​கள் சேர்க்கப்பட்டன. இதன் பின்​னர் இந்த ஜோடி ஆப்​கானிஸ்​தான் பந்​து​வீச்சை வெளுத்து வாங்​கியது. இதனால் 10.2 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 100 ரன்​களை எட்டியது. குயிண்​டன் டி காக் 34 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 19-வது அரை சதத்​தை​யும், ரியான் ரிக்​கெல்​டன் 23 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 4-வது அரை சதத்​தை​யும் விளாசினர். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் தென் ஆப்பிரிக்க அணி 210 முதல் 220 ரன்​கள் வரை குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் இவர்​கள் இரு​வரை​யும் 13-வது ஓவரை வீசிய ரஷித் கான் ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். குயிண்​டன் டி காக் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்களும், ரியான் ரிக்​கெல்​டன் 28 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும் விளாசிய நிலை​யில் ரஷித் கான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 114 ரன்​கள் குவித்​தது. ரியான் ரிக்​கெல்​டன் ஆட்​ட​மிழந்​த​போது ஸ்கோர் 13 ஓவர்களில் 127 ஆக இருந்​தது. இதன் பின்​னர் தென் ஆப்பிரிக்க அணி​யின் ரன் குவிப்பை வேகம் குறைந்த பந்துகளை வீசி ஆப்​கானிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்​கள் வெகு​வாக கட்​டுப்​படுத்​தினர். கடைசி 7 ஓவர்களில் தென் ஆப்​பிரிக்க அணி 60 ரன்​கள் சேர்த்​தது. டெவால்ட் பிரே​விஸ் 19 பந்​துகளில், 23 ரன்​களும், டேவிட் மில்​லர் 15 பந்​துகளில், 20 ரன்​களும், மார்கோ யான்​சன் 7 பந்​துகளில் 16 ரன்​களும் சேர்த்​தனர். ஆப்​கானிஸ்​தான் அணி சார்​பில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். ரஷித் கான் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணி ஒரு கட்​டத்​தில் 16 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 147 ரன்​கள் குவித்​தது. தனது 13-வது அரை சதத்தை அடித்த ரஹ்மனுல்லா குர்​பாஸ் 42 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசிய நிலை​யில் கேசவ் மகா​ராஜ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இப்ராகிம் ஸத்​ரன் 12, குல்​பா​தின் நயீப் 0, செடிகுல்லா அடல் 0, டார்​விஷ் ரசூலி 15, முகமது நபி 5 ரன்​களில் வெளியேறினர்.