ஐசிசி தொடரில் இத்தாலிக்கு முதல் வெற்றி – சகோதர ஜோடி சாதனை!

மும்பை, பிப். 13- ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று மும்பை வான்​கடே மைதான​தில் ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்டத்​தில் நேபாளம் – இத்தாலி அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த நேபாளம் 19.3 ஓவர்​களில் 123 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஆஃரிப் ஷெய்க் 27, கேப்​டன் ரோஹித் பவுடெல் 23, ஆசிப் ஷெய்க் 20, கரண் 18 ரன்​கள் சேர்த்​தனர்.
இத்​தாலி அணி தரப்​பில் கிரிஷான் கலுகமகே 3, பென் மனென்டி 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். ஜே ஜே ஸ்மட்​ஸ், அலி ஹசன், ஜஸ்​பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்​றினர். நேபாளம் அணி தனது கடைசி 5 விக்​கெட்​களை 9 ரன்​களுக்கு தாரை வார்த்​தது. 124 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இத்​தாலி 12.4 ஓவர்களில் விக்​கெட் இழப்​பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்​றது. சகோ​தரர்​களான அந்​தோனி மோஸ்கா 32 பந்துகளில், 6 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் ஜஸ்​டின் மோஸ்கா 44 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரிகளு​டன் 60 ரன்​களும் விளாசினர். ஆட்ட நாயக​னாக கிரிஷான் கலுகமகே தேர்​வா​னார். 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற அறி​முக அணி​யான இத்​தாலிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது. சகோதர ஜோடி சாதனை
நேபாளத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இத்​தாலி அணி​யின் சகோ​தரர்​களான ஜஸ்​டின் மோஸ்​கா, அந்​தோணி மோஸ்கா முதல் விக்​கெட்​டுக்கு 124* ரன்​கள் குவித்​தனர். இது டி20 உலகக் கோப்​பைகளில் சகோ​தரர்​களுக்கு இடையே​யான அதி​கபட்ச ரன்​கள் ஆகும். இந்த வகை​யில் கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி​யின் சகோ​தரர்​களான கம்​ரன் அக்​மல், உமர் அக்​மல் ஜோடி ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதிராக 96 ரன்​கள் பார்ட்​னர்​ஷிப்பை அமைத்​ததே சாதனை​யாக இருந்​தது. இதை தற்​போது மோஸ்​கா சகோதரர்​கள்​ முறியடித்​துள்​ளனர். மீதம் இருந்த 44 பந்​துகள்டி 20 உலகக் கோப்பை தொடரில் நேபாளத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இத்​தாலி அணி 44 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி பெற்​றது. டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் ஓர் அணி அதிக பந்​துகளை மீதம் வைத்து வெற்றி பெறு​வது இது 3-வது நிகழ்​வாகும். இதற்கு முன்​னர் 2024-ம் ஆண்டு தொடரில் அமெரிக்காவுக்கு எதி​ராக மேற்கு இந்​தி​யத் தீவு​கள் 55 பந்துகளை மீதம் வைத்​தும், 2021-ம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலி​யா​வுக்கு எதி​ராக இங்​கிலாந்து அணி 50 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தன.