அமெரிக்​கா​வில் இறந்த இந்​திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு

சியாட்​டில்: பிப்ரவரி 13-
அமெரிக்​கா​வில் போலீஸ் வாக​னம் மோதி உயி​ரிழந்த இந்​தி​யப் பெண்​ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்​டுலா, அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள நார்த்​ஈஸ்​டர்ன் பல்​கலைக்​கழகத்​தில் முது​நிலை தகவல்​தொழில்​நுட்பப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்​டில் நகர சாலையை கடக்​கும் போது, சைரன் ஒலி​யுடன் அவசர​மாக சென்ற போலீஸ் வாக​னம் மோதி​யது. இதில் ஜானவி கன்​டுலா உயி​ரிழந்​தார். இது தொடர்​பான வழக்கு சியாட்​டில் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. போலீஸ் வாக​னம் சைரன் ஒலி மற்​றும் அவசர​கால விளக்​கு​களை எரிய​விட்​டு​தான் சென்றது என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.
எனினும் இந்த வழக்​கில் ஜானவி குடும்​பத்​தினருக்கு 29 மில்​லியன் டாலர் (ரூ.262 கோடி) இழப்​பீடு வழங்க கிங் மாகாண உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. போலீஸ் வாக​னத்தை கவனக் குறை​வாக ஓட்​டிய கெவின் டேவ் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்​கப்​பட்​டது. அவர் மீது குற்ற வழக்கு எது​வும் பதிவு செய்​யப்​பட​வில்​லை. விபத்து நடந்த போது, இச்​சம்​பவத்​துக்கு சிறிய தொகை இழப்​பீ​டாக வழங்க வேண்​டி​யிருக்​கும் என சிரித்​துக் கொண்டு இழி​வாகக் கருத்து தெரி​வித்த மற்​றொரு போலீஸ் அதி​காரி டேனியல் ஆட்​ரர் என்​பவரும் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் தனது பணி நீக்​கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.