அசாம் எல்லைக்கு செல்கிறார் அமைச்சர் அமித்ஷா

புதுடெல்லி, பிப். 14- வங்​கதேசம் மற்​றும் மியான்​மர் நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் அசாம் எல்லை வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் அதி​கள​வில் ஊடுரு​வு​கின்​றனர். இவர்​களை திருப்பி அனுப்​புவதற்​கான பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அசாம் மற்​றும் மேற்​கு​வங்​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், அங்கு ஊடுரு​வல் பெரும் பிரச்​சினை​யாக வெடித்​துள்​ளது. எஸ்​ஐஆர் பணி​யின் போது ஊடுரு​வல்​காரர்​கள் கண்டு பிடிக்​கப்​பட்டு அவர்​களது பெயர் நீக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்​தின் சசார் மாவட்​டத்​தில் உள்ள நதன்​பூர் கிராமத்​துக்கு அமைச்​சர் அமித் ஷா வரும் 20-ம் தேதி செல்​கிறார். இங்​கு​தான் சட்​ட​விரோத குடியேறிகள் 200 பேர் கைது செய்​யப்​பட்​டனர். மறு​நாள் சர்​வ​தேச எல்​லைப் பகுதி அருகே அமைந்​திருக்​கும் நதன்​பூர் கிராமத்​துக்கு சென்று அங்கு நடை​பெறும் பல்​துறை மேம்​பாட்டு நிகழ்ச்​சிகளில் அமித் ஷா பங்​கேற்​கிறார். இங்கு பாது​காப்​புக்​கான ஏற்​பாடு​களை எல்​லைப் பாது​காப்பு படை மற்​றும் அசாம் போலீ​ஸார் ஆகியோர் செய்​து வரு​கின்​றனர்​.