பிரிட்டன் வீரர்களுக்கு இந்திய விமானப் படை பயிற்சி

புதுடெல்லி, பிப். 14- வரலாற்​றில் முதன்​முறை​யாக இந்​திய விமானப் படை அதி​காரி​கள் பிரிட்​டனில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (ஆர்​ஏஎஃப்) வேலி தளத்​தில் அந்​நாட்டு வீரர்​களுக்கு பயிற்சி அளிக்க உள்​ளனர். இதுகுறித்து பிரிட்​டன் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய விமானப்​படையைச் சேர்ந்த 3 தகு​தி​வாய்ந்த விமானப் பயிற்​றுநர்​கள் பிரிட்​டனின் ஆர்​ஏஎப் வேலி தளத்​திற்கு அனுப்​பப்பட உள்​ளனர். இது பிரிட்​டனின் அதிவேக ஜெட் விமானிகளுக்​கான முதன்​மைப் பயிற்சி தளமாகும். தொடக்​கத்​தில் இரண்டு ஆண்டு காலத்​திற்கு இந்​திய அதி​காரி​கள் அங்கு பணி​யமர்த்​தப்​படு​வார்​கள். அவர்​கள் “பிஏஇ ஹாக் டி2’ அல்​லது ‘டெக்​சன் டி1’ ரக விமானங்​களில் பயிற்சி அளிப்​பார்​கள். இந்​தப் பணி​யின் போது, இந்​திய அதி​காரி​கள் பிரிட்​டன் தளப​தி​களின் கீழ் பணி​யாற்​றி​னாலும், அவர்​கள் இந்​திய விமானப்​படை​யின் கட்​டுப்​பாட்​டிலேயே இருப்​பார்​கள். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.