ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!

புதுடெல்லி, பிப். 14- நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய ஆட்சியின் அடை​யாளத்தை மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது. இதன்​படி டெல்​லி​யில் புதிய நாடாளு​மன்​றம் கட்​டப்​பட்டு 2023-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்​தார்.அதோடு நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் இல்​லம், பிரதமர் அலு​வல​கம், பல்​வேறு அமைச்​சகங்​களின் அலு​வல​கங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இதில் ரூ.1,189 கோடி செல​வில் பிரதமர் அலு​வல​கம் (சேவா தீர்த்) கட்டி முடிக்​கப்​பட்டு உள்​ளது. இதனை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். சுமார் 5 ஏக்​கர் பரப்​பில் புதிய பிரதமர் அலு​வல​கம் கட்​டப்​பட்டு உள்​ளது. இதில் சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிர​தான கட்​டிடங்​கள் உள்​ளன. இதில் சேவா தீர்த் 1 கட்​டிடத்​தில் பிரதமர் அலு​வல​கம் செயல்​படும் சேவா தீர்த் 2 கட்​டிடத்​தில் கேபினட் செய​லா​ளர் அலு​வல​கம் செயல்​படும். சேவா தீர்த் 3 கட்​டிடத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சில் செயல​கம் மற்​றும் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலின் அலு​வல​கம் செயல்​படும். மேலும் மத்​திய அரசின் தலை​மைச் செயல​கத்​தின் ஒரு பகு​தி​யாக கர்த்​தவ்ய பவன் 1, கர்த்​தவ்ய பவன் 2 கட்​டிடங்​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி திறந்​து​வைத்​தார். இவற்​றில் நிதி​யமைச்​சகம், பாது​காப்​புத் துறை, சுகா​தா​ரத் துறை, கார்ப்​பரேட் விவ​காரம், கல்​வி, கலாச்​சா​ரம், சட்​டத் துறை, தகவல்- ஒலிபரப்​புத் துறை, வேளாண் துறை, ரசாயனத் துறை, பழங்​குடி​யினர் நலத் துறை ஆகியவை செயல்படும். பிரதமர் அலு​வல​கத்​துக்கு அரு​கில் ரூ.467 கோடி செல​வில் 36,000 சதுர அடி பரப்​பள​வில் பிரதமரின் வீடு கட்​டப்​பட்டு வரு​கிறது. இந்த வீட்​டில் இருந்து பிரதமர் அலு​வல​கம் மற்​றும் நாடாளு​மன்​றத்​துக்கு செல்ல பிரத்​யேக சுரங்​கப் பாதை​யும் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. பிரதமரின் அதி​காரப்​பூர்வ வீடு விரை​வில்​ திறக்​கப்​படும்​ என்​று தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.