நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

திருப்பதி: மார்ச் 2-
உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் நேற்று முன்தினம் இரவு திரு​மலைக்கு வந்​தார். அவரை திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிச்​சந்​திரா உட்பட பல உயர் அதி​காரி​கள் வரவேற்​றனர்.
பின்​னர், இரவு திரு​மலை​யில் தங்​கிய தலைமை நீதிபதி சூர்​ய ​காந்த், நேற்று காலை தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். தரிசனம் செய்த பின்​னர், ரங்​க ​நாயக மண்டபத்​தில் தலைமை நீதிப​திக்கு சேஷ வஸ்​திரம் அணி​வித்​து, வேத பண்​டிதர்​களால் ஆசி வழங்​கப்​பட்​டது. அதன் பின்​னர், தலைமை நீதிப​திக்கு தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்கப்பட்​டது. தரிசனம் செய்த பின்​னர், ரங்​க ​நாயக மண்டபத்​தில் தலைமை நீதிப​திக்கு சேஷ வஸ்​திரம் அணி​வித்​து, வேத பண்​டிதர்​களால் ஆசி வழங்​கப்​பட்​டது. அதன் பின்​னர், தலைமை நீதிப​திக்கு தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்கப்பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில், அறங்​காவலர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிச்​சந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்​ரி மற்​றும் உயர் நீதி​மன்ற மற்​றும் மாவட்ட நீதிப​தி​கள் பங்​கேற்​றனர். இதைத் தொடர்ந்​து, திருப்​ப​தி​யில் தாமினேடு பகு​தி​யில் புதி​தாகக் கட்​டப்பட உள்ள 16 கட்​டிடங்​கள் கொண்ட திருப்​பதி மாவட்ட புதிய மாவட்ட நீதி​மன்​றத்​துக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடிக்​கல் நாட்​டி​னார்.
பின்​னர் தலைமை நீதிபதி பேசும்​போது, “நீ​தி​மன்​றங்​களில் இரு தரப்பு வாதங்​களும் சரி​யான முறைப்​படி இருத்​தல் அவசி​யம். அப்படி இருந்​தால் ​தான் நீதிப​தி​யும் சரி​யான தீர்ப்பை வழங்க முடி​யும். அப்​படி நியா​மான தீர்ப்​பு​கள் வழங்​கப்​படும் பட்​சத்​தில் தான் மக்​களுக்கு சட்​டம், நீதி​மன்​றங்​கள், நீதிப​தி​கள் மீது நம்பிக்கை ஏற்​படும்” என்​றார்.இந்​நிகழ்ச்​சி​யில் ஆந்​திர மாநில உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்குர் உட்பட பல்​வேறு மாவட்​ட நீதிப​தி​கள்​, வழக்கறிஞர்​கள்​ பங்​கேற்​றனர்​.