
வேலூர்: மார்ச் 2-
அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த அறிவிப்பு? அதென்ன செயலி? இதனால் கிடைக்கும் நன்மைகள், சலுகைகள் என்னென்ன? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம். விவசாயிகளின் நலன் கருதி, நில உரிமையாளர்களைத் துல்லியமாகக் கண்டறிந்து,
அவர்களின் பெயரில் உள்ள விவசாய நிலங்களின் நேரடித் தரவுகளைச் சேகரித்து அடையாள எண் வழங்கப்படுகிறது..இந்த செயல்முறை மூலம் போலியான விண்ணப்பங்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான விவசாயிகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் நேரடியாகவும், விரைவாகவும் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.. உரங்கள் வாங்குவது முதல் பயிர் காப்பீடு செய்வது வரை அனைத்துக்கும் இந்த அடையாள எண் அவசியமாகிறது.. தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான அறிவிப்புக்கு முக்கியக் காரணம், அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளை முறைகேடுகள் இன்றி விநியோகிப்பதே ஆகும்.. பிரதம மந்திரியின் கவுரவ விவசாய நிதித் திட்டம் குறிப்பாக பிரதம மந்திரியின் கவுரவ விவசாய நிதித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும், மாநில அரசின் வேளாண் மானியத் திட்டங்களைப் பெறுவதற்கும் இந்த எண் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது.. ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனித்த எண் வழங்கப்படுவதால், நிகணினிமயமாக்கப்பட்டு இந்த அடையாள எண் பெறுவதால் விவசாயிகளுக்குப் பலன் தரக்கூடிய முக்கிய அம்சங்கள் ஏராளமாக உள்ளன.. முக்கியமாக உரங்கள் வாங்கும்போதும், பயிர் காப்பீடு தொடர்பான நடைமுறைகளிலும் இந்த அடையாள எண் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும்.. மேலும், அரசால் வழங்கப்படும் மானிய உதவிகள் அனைத்தும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க இந்த எண் மிகவும் துணையாக இருக்கிறது..
நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், எதிர்காலத்தில் விவசாயக் கடன்கள் மற்றும் இதர உதவிகளைப் பெறுவதில் ஏற்படும் விவசாயிகள் அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை தடையின்றிப் பெறுவதற்காக, தங்களது நில ஆவணங்களை அடிப்படையாக கொண்டு தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதற்காக நடைபெறும் சிறப்புப் பதிவில் விவசாயிகள் உடனே இணைந்து கொள்ள வேண்டும்என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. இந்த பதிவை மேற்கொள்வதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது..

















