மதுரையில் பிரதமர் மோடி உறுதி

மதுரை: மார்ச் 2-
தமிழகத்​தில் அரசு வேலை​வாய்ப்​பு, பணி​யிட மாற்​றம், டெண்​டர் ஒப்​பந்​தங்​கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதனால், தமிழகத்​தில் இருந்து திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பதை மக்​கள் தீர்​மானித்​து​விட்​டார்​கள் என்று மதுரை​யில் நடந்த தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.தேசிய ஜனநாயகக் கூட்​டணியின் 2-வது தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டம் மதுரை மண்டேலா நகரில் நேற்று நடை​பெற்​றது.இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இது பாண்​டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்​தான பூமி​யில் இருந்து பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவர், மாவீரன் அழகு ​முத்​துகோன், வீர​பாண்​டிய கட்​ட பொம்​மன், மருது சகோ​தரர்கள், இமானுவேல் சேகர​னாரின் பங்​களிப்பை நினை​வு​கூர்கிறேன். மனசாட்​சி இன்​றி, ஏழைகள், இளைஞர்​கள், விவ​சா​யிகளிடம் இருந்து திருடு​கின்​றனர். இப்​படிப்​பட்ட ஊழல் அரசு மேலும் தொடர தார்​மீக உரிமை இல்​லை. மக்​கள் தே.ஜ.கூட்​டணி அரசை கொண்​டுவர தீர்​மானித்​து​விட்​டனர். எங்​கள் கூட்​டணி தூய்​மை​யான, திறமை​யான ஆட்​சியை வழங்​கும்.