Home மாவட்டங்கள் பெங்களூர் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும் – சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும் – சுப்பிரமணியன் சுவாமி

சென்னை: மார்ச் 10-
இந்தியாவின் மூன்றாவது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போது வரைக்கும் நான் வெளிப்படுத்த வில்லை, நான் அவ்வாறு செய்தால் அது மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொருளாதார நிபுணர் ஆவார், மத்திய அமைச்சராகவும் ஒரு முறை இருந்துள்ளார். இவர் ஜனதா கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஆவார். மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிராக ஊழல் வழக்குகளை போட்டதும் இவர் தான். தற்போது பாஜகவில் இருந்தாலும், அவ்வப்போது கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மோடி சமரசம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவ்வப்போது கடுமையாக கருத்துக்களையும் கூறி வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் சமரசம் செய்து கொண்டதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வருகிறார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் இந்தியா போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூறினார். அதேபோல் ரஷ்யா உடன் எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவை நேரடியாக மிரட்டினார்.. அதன்பிறகு தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, ரஷ்யாவிடம் இந்தியா ஒரு மாதத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்.