Home செய்திகள் தேசிய செய்திகள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – விவாதம்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – விவாதம்

புதுடெல்லி: மார்ச் 10-
லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. இவர் பாஜகவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிப்பது இல்லை என்று தொடர்ந்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.ஓம்பிர்லா ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலைமை தவறுவதாகவும் கூறி வருகின்றனர். அதன்படி, காங்கிரஸின் எம்பி கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கினார். இந்த நோட்டீஸில் மொத்தம் 118 எம்பிக்ககளின் கையெழுத்து போட்டுள்ளனர். ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்பதால் சபையின் மாண்பு, நாகரீகம் கருதி அவர் இந்த நோட்டீஸில் கையெழுத்திடவில்லை. இந்நிலையில் தான் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி இன்று காங்கிரஸ் எம்பிக்கள் முன்மொழிய உள்ளனர். இதையடுத்து இன்று சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.