
சென்னை: மார்ச் 13-
‘தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; பொதுமக்களிடம் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்குதலால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகவும், அதன் விலை உயரப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ளபெட்ரோல் பங்க்குகளில் நேற்று முன்தினம் இரவு முதலே குவியத் தொடங்கினர். குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பைக்குகள், கார்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, எரிபொருளை நிரப்பினர்.எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ராயப்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. சிலர் கேன்களில் பெட்ரோல் வாங்க வந்தனர். அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்ததால், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள பங்க்குகளில் பெருமளவில் மக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில், சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் பைக்குகள், கார்களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இதனால், ஆலந்தூர், பரங்கிமலை, சென்ட்ரல், கோயம்பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த முடியாமல் வழக்கமாக வரும் பயணிகள் சிரமப்பட்டனர்.















