Home செய்திகள் தேசிய செய்திகள் பல்கலை.களுடன் இணைத்து மதரஸாக்களை மேம்படுத்த உ.பி. அரசு முடிவு

பல்கலை.களுடன் இணைத்து மதரஸாக்களை மேம்படுத்த உ.பி. அரசு முடிவு

புதுடெல்லி: மார்ச் 13-
உ.பி.​யில் மதரஸாக்​களை பல்​கலைக்​கழகங்​களு​டன் இணைப்​ப​தன் மூலம் அவற்​றின் நிலையை உயர்த்த உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது.
பாஜக ஆளும் உ.பி.​யில் சுமார் 25,000 மதரஸாக்​கள் உள்​ளன. இவற்​றில் 19,213 மதரஸாக்​கள் அரசு அங்​கீ​காரம் பெற்​றவை. இதில், 7,356 மதரஸாக்​களுக்கு உ.பி. அரசு நிதி கிடைக்​கிறது. இந்த மதரஸாக்​கள் அனைத்​தும் 53 ஆண்​டு​களுக்கு முன் 1973-ல் இயற்​றப்​பட்ட சட்​டத்​தின் அடிப்​படை​யில் செயல்​படு​கின்​றன. இவற்றை உ.பி.​யின் மதரஸா கல்வி கவுன்​சில் நிர்​வகிக்​கிறது. மாணவர்​களுக்கு அந்​தந்த மதரஸாக்​களால் கல்வி பயின்ற சான்றிதழ் அளிக்​கப்​படு​கிறது. இந்த முறையை மாற்​றி, அனைத்து மதரஸாக்​களும் அதன் அரு​கில் உள்ள பல்​கலைக்​ கழகங்​களு​டன் இணைக்​கப்பட உள்​ளன.
இதுகுறித்து உ.பி. அமைச்​சர் சஞ்​சய் நிஷாத் கூறுகை​யில், “இந்த நாடு முன்பு ஷரி​யா​வால் நிர்​வகிக்​கப்​பட்​டது. இப்​போது அரசியலமைப்பு சட்​டத்​தால் நிர்​வகிக்​கப்​படு​கிறது. இதன் அடிப்படை​யில் கல்வி ஒரே வித​மாக இருக்க வேண்​டும். இதற்​காக உ.பி. அரசு விரை​வில் மதரஸாக்​களை மாநில பல்கலைக்கழகங்களு​டன் இணைக்​கத் தயா​ராகி வரு​கிறது.
இந்த திட்​டத்​தின் கீழ் பள்​ளிக் கல்விக்கு பிறகு மதரஸா கவுன்​சில் நடத்​தும் பட்​டப்​படிப்​புக்​கான காமில் தேர்​வு, பட்ட மேற்படிப்புக்கான ஃபாசில் தேர்வு இனி பல்​கலைக்​கழகங்​களால் நடத்​தப்​படும். இதற்​காக 53 ஆண்​டு​கள் பழமை​யான உ.பி. மாநில மாநில பல்​கலைக்​கழக சட்​டத்தை திருத்த உள்​ளோம். மதரஸாக்களின் பட்​டங்​கள் உலகள​வில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இங்கு படிக்​கும் மாணவர்​கள் உயர்க்​கல்வி படிக்​க​வும் வேலைக்கு செல்​ல​வும் உள்​நாட்​டிலும் வெளி​நாட்​டிலும் பிரச்​சினை ஏற்படுகிறது. இதைக் கருத்​தில் கொண்டு பொதுக்​கல்வி மாணவர்களைப் போல் மதரஸா மாணவர்​களும் அனைத்து வசதிகளை பெறவே உ.பி. அரசு இந்த மாற்​றங்​களை செய்​கிறது” என்​றார். உ.பி. முதல்​வர் யோகி, “மதரஸாக்​கள் தங்​கள் மத அடையாளத்திலிருந்து வெளியே வர வேண்​டும்” என கூறி வருகிறார். இதற்​காக அவர் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றது முதல் மதரஸாக்​களில் கம்ப்​யூட்​டர் உள்​ளிட்ட நவீன கல்விக்​கான பாடங்களை கட்​டாய​மாக்​கி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.