
நியூயார்க்: மார்ச் 14-
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளும் கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். மேலும், அத்தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி டிரம்ப் தாக்கினால் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்பதால் வளைகுடாவில் அச்சம் நிலவுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதனால் ஈரான் அந்த இரண்டு நாடுகளின் ராணுவத்திற்கு எதிராகவும் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. வளைகுடா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதில் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உயர்ந்த பெட்ரோல் விலை அமெரிக்காவிலும் ஆயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விலை அதிகரிப்பு அமெரிக்காவிற்கு லாபம் என்றாலும், போரால் பெருமளவு பணத்தை செலவு செய்து வருகிறது அமெரிக்கா. அதேபோல் எண்ணெய் விலைஉயர்வால் அமெரிக்காவும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களையும் தாக்கி வருகிறது. கார்க் தீவில் தாக்குதல் இதனால் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.அந்த வகையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளும் கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தி அத்தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



















