Home பக்தி கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை: மார்ச் 24 –
மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. சென்னை, மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான வரு​டாந்​திர பங்​குனிப் பெரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது.
இத்திரு​விழா ஏப்​.1-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. நேற்று காலை 5.45 மணிக்கு கபாலீஸ்​வரர், கற்​ப​காம்​பாள், விநாயகர், சிங்​கார​வேலர், சண்​டிகேஸ்​வரர் மண்​டபத்​தில் எழுந்​தருளல் நிகழ்ச்சி நடந்​தது. அதைத் தொடர்ந்​து, காலை 6.20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்​றம் நடந்​தது.
இதில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர். பின்னர், விமான சேவை நடந்​தது. நேற்று இரவு அம்​பாள், மயில் வடிவத்​தில் சிவபூஜை காட்​சி​யும், புன்​னை, கற்​பக, வேங்கை மர வாக​னங்​கள் புறப்​பாடும் நடை​பெற்​றன.இந்த நிகழ்ச்​சிகளில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். மேலும், நாளை அதி​காரநந்​திக் காட்சி நடக்​கிறது. அதைத் தொடர்ந்​து, கந்​தர்​வன், கந்​தர்​வி, மூஷிகம், வெள்​ளி​விடை வாக​னங்​கள் புறப்​பாடும், திரு​ஞான சம்​பந்​தர் திரு​முலைப்​பால் விழா​வும் நடக்​கிறது.
மார்ச் 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாக​னக் காட்​சி​யும், பங்​குனிப் பெரு​விழா​வின் பிர​தான நிகழ்​வான திருத்​தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி காலை​யும் நடை​பெறவுள்​ளன.எட்​டாம் நாள் விழா​வாக மார்ச் 30-ம் தேதி அறு​பத்து மூவர் வீதி​யுலா நடை​பெறும். மார்ச் 31-ம் தேதி ஐந்​திரு​மேனிகள் விழா​வும், ஏப். 1-ம் தேதி தீர்த்​த​வாரி​யும் நடை​பெற உள்​ளன. தொடர்ந்​து, இரவு 8 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவத்​தோடு கொடி இறக்​கப்​பட்​டு பங்​குனி விழா நிறைவு பெறுகிறது.