Home பக்தி 497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

மதுரை: மே 6-
கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார். அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் மலர் தூவி வரவேற்​றனர். 21 பெண்​கள் பூசணிக்​கா​யில் தீபமேற்றி கள்​ளழகருக்கு திருஷ்டி கழித்​தனர்.
அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா கடந்த ஏப்​.27-ம் தேதி தொடங்​கியது. மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க சுந்​தர​ராஜப்​பெரு​மாள், கள்​ளர் திருக்​கோலத்​தில் ஏப்​.29-ல் மலை​யி​லிருந்து மதுரைக்கு புறப்​பட்​டார். மே 1-ம் தேதி அதி​காலை 5.48 மணிக்கு பச்​சைப் பட்டு உடுத்தி கள்​ளழகர் தங்​கக் குதிரை​யில் வைகை ஆற்​றில் இறங்​கி​னார்.மே 2-ம் தேதி தேனூர் மண்​டபத்​தில் மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்​தார். மே 4-ம் தேதி தல்​லாகுளம் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​தில் அதி​காலை 2 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் எழுந்​தருளி அழகர்​மலைக்​குத் திரும்​பி​னார்.
அன்​றிரவு சுந்​தர​ராஜன்​பட்டி மறவர் மண்​டபத்​தில் கள்​ளழகர் பயணத்​தால் ஏற்​பட்ட உடல் களைப்பை போக்​கும் வகை​யில் அபிஷேகம், ஆராதனை நடந்​தது. ஒன்​ப​தாம் நாளான நேற்று (மே 5) காலை 10.40 மணி​யள​வில் கோட்டை வாசல் பகு​தி​யில் நுழைந்​தார்.
அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ என கோஷமிட்​டு, கள்​ளழகரை மலர்​ தூவி வரவேற்​றனர். பின்​னர் கருப்​பண​சாமி கோயி​லில் தீபா​ராதனை முடிந்து கோயிலுக்​குள் நுழைந்​த​போது 21 பெண்​கள் பூசணிக்​கா​யில் கற்​பூர தீபமேற்றி கள்​ளழகருக்கு திருஷ்டி கழித்​தனர்.
சுந்​தர​வல்​லித்​தா​யார் யானை வரவேற்​ற​நிலயில் கோயிலுக்​குள் சென்று இருப்​பிடம் சேர்ந்​தார். 10-ம் நாளான இன்று (மே 6) உற்சவ சாற்​று​முறை​யுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரி ஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் விரிவாக செய்​துள்ளனர்.