Home செய்திகள் தேசிய செய்திகள் பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!

பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!

புதுடெல்லி, ஏப்ரல் 16- பிற கட்சிகளில் இருந்து பாஜக​வில் இணைந்த பலரும் முதல்​வர், துணை முதல்​வர் உள்​ளிட்ட முக்​கிய பொறுப்புகளைப் பெற்​றுள்​ளனர். அந்தப் பட்​டியலில் பிஹார் முதல்​வ​ராகப் பதவி​யேற்ற சாம்​ராட் சவுத்​ரி​யும் இணைந்துள்ளார். சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிர​சாத்​தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்​சி​யில் கடந்த 1990-ம் ஆண்​டு​களில் அரசி​யலைத் தொடங்​கினார். அப்​போது முதல்​வ​ராக இருந்த ராப்ரி தேவி​யின் அமைச்​சர​வை​யில் அமைச்​ச​ராக இருந்​தார். பின்​னர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் 2014-ல் இணைந்து அமைச்சரானார். கடந்த 2017-ல் பாஜக​வில் இணைந்​தார். முதலில் சட்​டமன்ற மேலவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த சவுத்​ரி, பின்​னர், மாநில பாஜக தலை​வ​ரா​னார். நிதிஷ்கு​மார் அரசில் துணை முதல்​வ​ராக இருந்த சாம்​ராட், இப்​போது முதல்​வ​ராக​வும் பொறுப்​பேற்​று​விட்​டார். ஆர்​எஸ்​எஸ் பின்​னணி இல்​லாத சாம்​ராட் பாஜக.​வில் சேர்ந்து முதல்​வ​ராகி இருக்​கிறார். இது​போல், பாஜக​வின் நேரடி அரசி​யல் பின்​னணி எது​வுமின்றி மற்ற கட்​சி​யில் இருந்து வந்​தவர்​களில் இது​வரை 9 பேரை முதல்வர்​களாக நியமித்​துள்​ளது பாஜக. இந்தப் பட்​டியலில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் உள்ளார். இவர் காங்​கிரஸில் இருந்து 2015-ல் பாஜக​வில் இணைந்​தவர். அசாமில் தருண் கோகோய் தலை​மையி​லான காங்​கிரஸ் அரசில் அமைச்​ச​ராக​வும் ஹிமந்த பிஸ்வா பணி​யாற்​றி​யுள்​ளார். கடந்த 2016-ல் மீண்​டும் வந்த பாஜக ஆட்​சி​யின் அமைச்​ச​ராக இருந்​தவர், 2021 தேர்​தல் வெற்​றிக்கு பின் முதல்​வ​ராகி விட்​டார். கடந்த 2016-ல் பாஜக அசாமில் தனது முதல் ஆட்​சியை அமைத்தபோது, சர்​வானந்த சோனோ​வால் முதல்வரானார். இவரும் பாஜக, ஆர்​எஸ்​எஸ் பின்​னணி இல்​லாமல், ‘அனைத்து அசாம் மாணவர் சங்​கம்’ கட்​சி​யில் இருந்து வந்​தவர். பின்​னர் ‘அசாம் கண பரிஷத்’ கட்​சி​யில் இணைந்த சோனே​வால், 2011-ல் பாஜக​வில் இணைந்தார்.