Home செய்திகள் தேசிய செய்திகள் ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

புதுடெல்லி: ஏப்ரல் 27 –
ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும் கட்சி தாவும் அபா​யம் உரு​வாகி வரு​கிறது. இது, ராகவ் சத்தா தலை​மை​யில் ஆம் ஆத்மி கட்சி எம்​.பி.க்​கள் பாஜக​வில் இணைந்ததன் தாக்​க​மாகக் கருதப்​படு​கிறது.டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலின் ஆம் ஆத்மி கட்​சிக்கு நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில் 10 உறுப்​பினர்​கள் இருந்​தனர். இவர்​களில் ஏழு பேர் கட்​சிக்கு எதி​ராக கிளர்ச்சி செய்ய ஒருங்​கிணைந்​தனர். ராகவ் சத்​தா, சந்​தீப் பதக், ஸ்வாதி மாலி​வால், அசோக் மிட்​டல் உள்​ளிட்ட இந்த 7 பேரும் பாஜக​வில் இணைந்​தனர். இந்​தக் கிளர்ச்​சி​யின் தாக்​கம் மக்​களவை மற்​றும் பஞ்​சாப் சட்​டபேர​வை​யிலும் ஆம் ஆத்​மிக்கு எதிராக குரல் ஒலிக்கும் சூழல் உரு​வாகி வரு​கிறது.மக்​களவை​யில் ஆம் ஆத்​மிக்கு 3 உறுப்​பினர்​கள் உள்​ளனர். பஞ்சாபில் முதல்​வர் பகவந்த் மான் தலை​மையி​லான அரசில் 92 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இவர்​களி​லும் பலர் ஆம் ஆத்​மியை விட்டு வில​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இவர்​கள் அனைவரை​யும் கட்​சி​யில் தக்க வைப்​பது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு பெரும் சவாலாகிவிட்​டது. இதனால் ஆம் ஆத்மி கட்​சி​யின் எதிர்​காலம் தற்​போது பெரும் கேள்விக்​குறி​யாகி வரு​கிறது. பஞ்​சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ராஜ்கு​மார் சப்​பே​வால் (ஹோஷி​யார்​பூர்), குர்​மீத் சிங் ஹேயர் (சங்​ரூர்), மல்​விந்​தர் சிங் காங் (அனந்த்​பூர் சாஹிப்) ஆகியோர் கட்சி தாவும் பட்​டியலில் முன்​னணி​யில் உள்​ளனர். வரும் சில மாதங்​களில், இவர்​கள் பாஜக​வில் இணை​ய​லாம் என கூறப்​படு​கிறது.