Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல் கண்டனம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல் கண்டனம்

புதுடெல்லி: ஏப்ரல் 27 –
மேற்கு வங்​கத்​தில் காங்​கிரஸ் தொண்​டர் தேப்​தீப் சாட்​டர்ஜி கொல்​லப்​பட்ட சம்​பவத்​துக்கு ராகுல் காந்தி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தேர்​தலுக்​குப் பிறகு திரிண​மூல் கட்சி குண்​டர்​களால் காங்​கிரஸ் தொண்​டர் தேப்​தீப் சாட்​டர்ஜி படு​கொலை செய்​யப்​பட்​டது கடும் கண்​டனத்​துக்கு உரியது. அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.
மேற்கு வங்க மாநிலத்​தில் ஜனநாயகத்​துக்​குப் பதிலாக திரிண​மூல் காங்​கிரஸின் குண்​டர்​கள் ராஜ்ஜி​யம் நடை​பெற்று வரு​கிறது. வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகும் மாற்​றுக் கருத்து உடைய​வர்​களை மிரட்​டு​வது, தாக்​கு​வது மற்​றும் அவர்​களின் குரலை நசுக்​கு​வது திரிண​மூல் காங்​கிரஸின் அடை​யாள​மாக மாறி​விட்​டது.
காங்​கிரஸின் அரசி​யல் ஒரு போதும் வன்​முறையை அடிப்​படை​யாகக் கொண்​டதல்ல; இனிமேலும் இருக்​காது. நாங்​கள் பல தொண்​டர்​களை இழந்​திருந்​தா​லும், எப்​போதும் அகிம்சை மற்​றும் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் பாதையையே தேர்ந்​தெடுத்​துள்​ளோம்.
இதுவே எங்​களது பாரம்​பரி​யம் மற்​றும் உறு​திப்​பாடு. குற்​ற​வாளி​கள் அனை​வரும் உடனடி​யாகக் கைது செய்​யப்பட வேண்​டும். அவர்​களுக்​குக் கடுமை​யான தண்​டனை வழங்​கப்பட வேண்​டும். தேப்​தீப் சாட்​டர்ஜி குடும்​பத்​துக்கு முழு பாது​காப்பு மற்​றும் இழப்​பீடு வழங்க வேண்​டும். இந்​தி​யா​வின் அகிம்​சைப் பாரம்​பரி​யத்​துக்​குக் களங்​கம் விளைவிக்​கும் இந்த அரசி​யலுக்கு நாங்​கள் பணிய மாட்​டோம். நீதி நிலை​நாட்​டப்​படும். இவ்​வாறு ராகுல் கூறி​யுள்​ளார். ஆசன்​சோல் வடக்கு தொகுதி காங்​கிரஸ் வேட்​பாளர் பிரசென்​ஜித் புய்​தாண்​டி​யுடன் இணைந்து தேப்​தீப் சாட்​டர்ஜி பணி​யாற்றி வந்​தார். தேர்​தல் முடிந்து திரும்​பிக் கொண்​டிருந்த போது, திரிண​மூல் காங்​கிரஸுடன் தொடர்​புடைய சமூக விரோ​தி​களால் அவர் கொடூர​மாகத் தாக்​கப்​பட்​ட​தாக​வும், பின்​னர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​த​தாக​வும் மேற்கு வங்க மாநில காங்​கிரஸ்​ கமிட்​டி​யின்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.