Home செய்திகள் தேசிய செய்திகள் நோயாளிக்கு இருக்கை மறுப்பு: போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30,000 அபராதம்

நோயாளிக்கு இருக்கை மறுப்பு: போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30,000 அபராதம்

மலப்புரம்: ஏப்ரல் 27 –
கேரளாவின் மலப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் முகமது ஜைனுதீன் கோர்​மத். இவர் திருச்​சூர் மாவட்​டம் அம்பலூரில் இருந்து மலப்​புரத்​தில் உள்ள கொல்​லப்​புரம் பகு​திக்கு அண்​மை​யில் கேரள மாநில போக்​கு​வரத்​துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்​தில் ஏறி உள்ளார்.
அதில் இருக்கை இல்லை. இதையடுத்து, தனக்கு உடல் ​நிலை சரியில்லாததால் இருக்​கை வழங்க வேண்​டும் என்​று நடத்துநரிடம் ஜைனுதீன் கூறி​யுள்​ளார். அப்​போது திருச்​சூரில் நிச்ச​யம் இருக்கை கிடைக்​கும் என்​று உறுதி அளித்​துள்​ளார். ஆனால் உறுதி அளித்தபடி இருக்கை தரவில்லை. மேலும், அவரை கொல்​லப்​புரத்​தில் இறக்​கி​வி​டா​மல், நீண்ட தூரம் சென்று காக்​கட் பஸ் நிறுத்​தத்தில் இறக்​கி​விட்​டுள்ளார். இதனால் கடும் மன உளைச்​சலுக்கு ஜைனுதீன் ஆளா​னார்.
இதைத் தொடர்ந்து முகமது ஜைனுதீன், மலப்​புரம் மாவட்ட நுகர்வோர் ஆணை​யத்​தில் வழக்கு தொடுத்​தார். வழக்கை விசாரித்த நுகர்​வோர் ஆணை​யத்​தின் தலை​வர் கே.மோகன்​தாஸ், உறுப்​பினர்​கள் பிரீத்தி சிவ​ராமன், சி.​வி.​முகமது இஸ்மாயில் ஆகியோர் கேஎஸ்​ஆர்​டிசி நிறு​வனம் ரூ.30 ஆயிரம் அபராதத்தை 45 நாட்களுக்குள் வழங்க உத்​தர​விட்​டனர். தவறினால் 9% வட்​டி​ தரப்பட வேண்​டும் என்​றும் அவர்கள் உத்தரவிட்டனர்.