
சென்னை: மே 7-
தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. 113 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஒரு நிலையான ஆட்சியை எப்படி வழங்குவீர்கள் என்று கவர்னர் விஜயிடம் கேள்வி எழுப்பி உள்ளார் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக முன்னிலை பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்கள் ஆதரவை விஜய் கட்சிக்கு வழங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று கவர்னரை சந்தித்த விஜய் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கூறினார். விஜய் பதவியேற்பு விழா இன்று 7ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை இரண்டாவது முறையாக விஜய் கவர்னரை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்பேன் என்றும் கவர்னரிடம் விஜய் உறுதி அளித்தார். கவர்னர் உடனான விஜய் சந்திப்பிற்கு பிறகு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விஜய் கொடுத்த விளக்கம் கௌரவருக்கு திருப்தி ஏற்படுத்தவில்லை என்றும் 113 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு எப்படி ஒரு நிலையான ஆட்சியை வழங்குவீர்கள் என்றும் விஜய்யிடம் கவர்னர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 எம்எல்ஏக்கள் பட்டியலை கொடுத்த பிறகு தன் உங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று விஜய் இடம் கவர்னர் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதப்படுத்தும் கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே கவர்னர் மத்திய பிஜேபி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு தமிழகத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தை அவர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் கவர்னரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதற்கு இடையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது அந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. பதவி ஏற்பு விழா தொடர்ந்து தாமதம் ஆகி வருவதால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் வருத்தமும் கோபமும் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் போராட்டங்கள் அல்லது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்று மத்திய உளவுத்துறை கூறி உள்ளது அதை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது


















