
புதுச்சேரி: மே 9 –
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர் பதவியேற்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக முறையே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதேநேரம் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
ஏற்கெனவே கடந்த 3 நாட்களுக்கு முன் என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித்தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
என்டிஏ கூட்டணி அமைச்சரவையில் பாஜவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து, புதிய ஆட்சி அமைய முதல்வர் பதவியை ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் நேற்று முன்தினம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமி, பேரவையின் பாஜக தலைவர் நமச்சிவாயம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதன்பிறகு பதவியேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்யப்படும்.
அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு, எந்தக் கட்சியினருக்கு என்பது பதவி தரும்போது தெரியும். பேரவைத் தலைவர் யார் என்பதையும் பிறகு தெரிவிக்கிறேன்” என்றார்.
என்டிஏ எம்எல்ஏக்கள் தரப்பில் விசாரித்தபோது, “வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்க முடிவு எடுத்துள்ளார்” என்று தெரிவித்தனர். இதுதொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.


















