Home மாவட்டங்கள் பெங்களூர் தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி

தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி

மதுரை: மே 18 –
தவெக ஆட்​சி​யில் அதி​முக, பாஜக ஆதர​வாளர்​களுக்கே அரசு வழக்​கறிஞர்​கள் பதவி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தவெக வழக்​கறிஞர்​கள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளனர்.தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை வழக்​கறிஞர், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞர், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்​கறிஞர்​கள், கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், உரிமை​யியல், குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர்​கள் என 180 அரசு வழக்​கறிஞர் பதவி​கள் உள்ளன.
இப்​ப​தவி​களில் ஆளும் கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள் நியமிப்​பது வழக்​கம். திமுக ஆட்​சி​யின்​போது அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தோர் தவெக ஆட்​சிக்கு வந்​ததும் பதவி வில​கினர். இந்​நிலை​யில், தலைமை அரசு வழக்​கறிஞ​ராக விஜய் நாராயணன், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக ஜான் சத்​யன், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.க​வுதமன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் அதி​முக, பாஜக ஆதர​வாளர்​கள் ஆவர்.
இவர்​களில் விஜய் நாராயணன் அதி​முக ஆட்​சி​யில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்​கறிஞ​ராக இருந்​தார். பாலசுப்​பிரமணி​யம், கவுதமன் ஆகியோ​ரும் அதி​முக ஆட்​சி​யில் கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக இருந்​தனர். அதி​முக ஆட்​சி​யில் அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தவர்​களை, தவெக ஆட்​சி​யிலும் அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்​தது தவெக வழக்​கறிஞர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்ளது.இதுகுறித்து தவெக வழக்​கறிஞர்​கள் கூறிய​தாவது: விஜய் கட்சி தொடங்கி 3 மாநாடு​கள் வரை பிரச்சினை இல்​லாமல் போனது. கரூர் மாநாட்​டில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்​தச் சம்​பவத்​தால் விஜய்யை அனை​வரும் கைவிட்​டனர். அப்​போது, விஜய்க்கு பக்​கபல​மாக இருந்து அவரைப் பாது​காத்​தது தவெக வழக்​கறிஞர் அணி​தான்.
கரூர் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் கருத்​துத் தெரி​வித்த 217 தவெக​வினர், திமுக ஆட்​சி​யில் குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர். 5,328 தவெக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். தவெக வழக்​கறிஞர் அணி தமிழகம் முழு​வதும் பயணம் செய்து கைதாகி​யிருந்த கட்​சி​யினர் ஜாமீனில் வர உதவியது.