Home செய்திகள் தேசிய செய்திகள் கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்றது அம்பலம்

கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்றது அம்பலம்

ஜெய்ப்பூர்: : ​மே 18-
2025-ம் ஆண்டு நடை​பெற்ற நீட் தேர்​வில் ஜெய்ப்​பூர் நகரிலுள்ள ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்​றுள்ள தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இவர்​கள்​தான் இந்த ஆண்டு நீட் வினாத்​தாளை கசிய விட்​டது தொடர்​பாக கைது செய்யப்பட்டவர்​கள் என்று போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.எம்​பிபிஎஸ், பிடிஎஸ் உள்​ளிட்ட மருத்​து​வப் படிப்​பு​களில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்​தேர்வு அவசி​யம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஒவ்​வொரு ஆண்​டும் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​த​தால் அந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், நீட் மறுத்​தேர்​வுக்கு மாணவர்​கள் புதி​தாக விண்​ணப்​பிக்க தேவை​யில்லை என்​றும் விளக்​கம் அளிக்கப்​பட்​டுள்​ளது.மறு​தேர்​வுக்​கான புதிய ஹால் டிக்​கெட் மற்றும் தேர்வு மையங்​கள் குறித்த விவரங்​கள் விரை​வில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக விரிவான விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகா​ராஷ்டிர மருத்​துவ மாணவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். மேலும், விசாரணைக்​காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.இதனிடையே, நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளியே வந்து கொண்​டிருக்​கின்​றன. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து கடந்த ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்கியது தெரிய​வந்​துள்​ளது. இவர்​களில் ஒரு​வர், சிகார் பகுதியில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார். கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான தினேஷ் பிவாலுக்கு ஓர் அரசி​யல் கட்​சி​யுடன் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதனிடையே கடந்த 2025-ம் ஆண்​டில் ராஜஸ்​தானின் மங்​கிலால் மற்​றும் தினேஷ் பிவால் குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்​வில் வெற்றி பெற்​றுள்ள தகவலும் அம்​பல​மாகி​யுள்​ளது.மேலும் இவர்கள் 5 பேரும் பிரபல​மான மருத்​து​வக் கல்​லூரி​களில் சேர்ந்து படித்து வரு​கின்​றனர்.