
சென்னை: மே 18 –
தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் என கூறினார்.அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் ஆட்சிதான். சிறு பிள்ளைகளை, குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்து ஆட்சி அமைத்துள்ளனர். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோற்றோம்; அவர்கள் எந்த பணியும் செய்யாமல் வெற்றி பெற்றனர். வாக்காளர்களை சந்திக்காமல், முகவர்களை நியமிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக வெற்றி தோல்விகளை சமமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கம் ஆகும்.
பல வெற்றிகளையும் கண்டுள்ளது; பல தோல்விகளையும் திமுக சந்தித்துள்ளது என கூறினார்.

















