
சென்னை: மே 18-
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் வழியாக நேற்று மாலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
மாலை 4.25 மணி அளவில், அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று அடையாறு பாலத்தில் நின்றது. வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதியவர் ஒருவர் காரில் இருந்து இறங்கினார். திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடையாறு ஆற்றில் குதித்தார்.
இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் தத்தளித்தவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மயிலாப்பூர், சைதாப்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே, அடையாறு போலீஸாரும் விரைந்து வந்தனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் (85) என்பது தெரியவந்தது.
போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் வழியாக நேற்று மாலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.மாலை 4.25 மணி அளவில், அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று அடையாறு பாலத்தில் நின்றது. வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதியவர் ஒருவர் காரில் இருந்து இறங்கினார். திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடையாறு ஆற்றில் குதித்தார்.இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் தத்தளித்தவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மயிலாப்பூர், சைதாப்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே, அடையாறு போலீஸாரும் விரைந்து வந்தனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் (85) என்பது தெரியவந்தது.போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




















