Home செய்திகள் தேசிய செய்திகள் போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்

போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: ​மே 18-
போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு தொடர்​பாக, தனது மகனை போலீ​ஸில் ஒப்​படைத்ததாக மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் தெரி​வித்​தார்.
பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய மத்​திய உள்​துறை இணை அமைச்​சரு​மான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்​பாக எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது:
சத்​யமேவ ஜெயதே (வாய்​மையே வெல்​லும்). சட்​டம் மற்​றும் நீதித்​துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத் விசா​ரணைக்​காக எங்​கள் வழக்​கறிஞர்​கள் மூலம் தெலங்​கானா போலீ​ஸார் முன்னிலை​யில் இன்று ஆஜரா​னார்.
இதை நான் முன்​பும் கூறி​யுள்​ளேன்; அது என் சொந்த மகனாக இருந்​தா​லும் சரி, அல்​லது ஒரு சாதாரண குடிமக​னாக இருந்தாலும் சரி, சட்​டத்​தின் முன் அனை​வரும் சமம்​தான். தன் மீது எந்​தத் தவறும் இல்லை என்​ப​தில் எனது மகன் உறு​தி​யாக உள்ளார்.
விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்​துழைப்​ப​தி​லும், நீதித்​துறையை மதிப்​ப​தி​லும் நான் நம்​பிக்கை கொண்​டுள்​ளேன். நீதி​மன்ற நடவடிக்​கைகள் தற்​பொழுது நிலு​வை​யில் உள்​ளதோடு, வரும் நாட்​களில் உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படலாம் என்​றும் எதிர்பார்க்கப்​படு​கிறது.
எங்​கள் சட்​டக் குழு​வினர் அறி​வுரை வழங்​கிய போதி​லும், விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தில் எங்​கள் தரப்​பில் எந்​தத் தயக்​க​மும் இருக்​கக் கூடாது என்று நான் கருதினேன்.
நீதித்​துறை மீது எனக்கு முழு நம்​பிக்கை உள்​ளது. நீதி வழங்​கப்​படு​வது தாமத​மாகலாம், ஆனால் ஒரு​போதும் மறுக்கப்படாது. இவ்​வாறு மத்​திய அமைச்​சர் சஞ்​சய் தெரிவித்துள்ளார்.