Home செய்திகள் தேசிய செய்திகள் இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை

இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை

டெல்லி: மே 18-
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வந்த அமெரிக்காவின் ‘தற்காலிக ஜன்னல்’ இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. ஒருபுறம் வளைகுடாப் போர், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடி என இந்தியா இப்போது ஒரு மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஈரான் போர் காரணமாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $72-லிருந்து $105ஆக எகிறிக் கிடக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் வழியாகவே நடக்கிறது. ஹார்முஸ் முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக எகிறிவிட்டது. இது கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்குச் சுமார் ₹3 உயர்த்தப்பட்டது. வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் வருவது சீராக இல்லாத நிலையில், இப்போது ரஷ்யாவிடமிருந்து கிடைத்த கச்சா எண்ணெய்யும் நின்றால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு தாறுமாறாக உயரும்.
இந்த விலை உயர்வு குறித்து பெட்ரோல் ஸ்டோன் எல்எல்பி சர்வதேச வணிக இயக்குநர் ரிஷப் ஜெயின் கூறும்போது, “சமீபத்திய ₹3 எரிபொருள் விலை உயர்வு உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சர்வதேச சரக்குக் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.
தற்போது உற்பத்தியாளர்கள் தங்களின் மூலதனத்தைத் தக்கவைக்க உற்பத்தியைக் குறைத்து, இருக்கும் ஸ்டாக்குகளை வைத்தே ஆர்டர்களை முடித்து வருகின்றனர். சந்தையில் போட்டி போட முடியாத சிறிய நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என எச்சரித்துள்ளார்.