Home செய்திகள் தேசிய செய்திகள் தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

போபால், மே 19- தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக பெற்​றோர் குற்​றம் சாட்டி உள்​ளனர். மகளின் உடலை வாங்க மறுத்து அவர்​கள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வருகின்​றனர்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா நகரைச் சேர்ந்​தவர் ட்விஷா சர்மா (31). மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரில் உள்ள கல்​லூரி​யில் படித்​த​போது, கடந்த 2012-ம் ஆண்​டில் மிஸ் புனே பட்​டத்தை வென்றார். பின்​னர் மாடலிங் உலகில் கால் பதித்த அவர் கடந்த 2021-ம் ஆண்​டில் தெலுங்​கில் வெளி​யான ‘‘முக்​குரு மொனகல்​லு’’ என்ற திரைப்​படத்​தில் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​தார். வேறு சில இந்​தி, தெலுங்கு படங்​களி​லும் அவர் நடித்​திருக்​கிறார். திரைஉல​கில் தொடர்ந்து முன்​னேற முடி​யாத நிலை​யில் மும்பையில் உள்ள முன்​னணி கார்​ப்பரேட் நிறு​வனத்​தில் பணியில் சேர்ந்​தார். மும்​பை, டெல்லி உட்பட பல்​வேறு நிறு​வனங்​களில் மார்க்​கெட்​டிங் மேலா​ள​ராகப் பணி​யாற்​றி​னார். கடந்த 2024-ம் ஆண்​டில் இணை​யம் வாயி​லாக மத்​திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த சமர்த் சிங்​குடன் அவருக்கு பழக்கம் ஏற்​பட்​டது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பரில் இரு வீட்டாரின் சம்​மதத்​துடன் ட்விஷா சர்​மா, சமர்த் சிங் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்​துக்​குப் பிறகு கார்ப்​பரேட் நிறுவன பணி​யில் இருந்து வில​கிய ட்விஷா கணவருடன் போபாலில் வசித்து வந்​தார். ஆரம்பம் முதலே கணவர் வீட்​டார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. சில மாதங்​களுக்கு முன்பு ட்விஷா கர்ப்​ப​மா​னார். இதன்​பிறகு அவரின் நடத்​தை​யில் கணவர் சமர்த் சிங்​குக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. இதனால் கணவன், மனைவி இடையே மோதல் முற்​றியது. இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி போபாலில் உள்ள வீட்​டில் ட்விஷா தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். அங்குள்ள எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டது. ஆனால் ட்விஷா​வின் பெற்​றோர், தங்​களது மகளின் மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக குற்​றம் சாட்டி உள்​ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ட்விஷாவின் மாமி​யார் ஓய்வுபெற்ற நீதிபதி கிரி​பாலா கைது செய்யப்பட்டார். கணவர் சமர்த் சிங் தலைமறை​வாகி​விட்​டார்.