Home செய்திகள் தேசிய செய்திகள் பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை

பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை

புதுடெல்லி: மே 19 –
மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
நாட்டில் தெருநாய்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் கொடூரமான யதார்த்தத்தை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறியது. தெருநாய்களின் கடி மற்றும் தாக்குதல் சம்பவங்கள் பொதுப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைகின்றன. சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இத்தகைய தாக்குதல்களால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். நாடு முழுவதும் தெரு நாய்களின் குணாதிசயம் திடீரென மாறி உள்ளது. பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களை கடித்து குதறுவது தொடர் கதை ஆகி உள்ளது மேலும் இப்போது எல்லாம் தெருநாய்கள் கடித்தால் அது உயிர் பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடிகிறது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளது.