Home மாவட்டங்கள் பெங்களூர் திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி

திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி

சென்னை: மே 25-
“எங்​களை நீங்​கள் தாக்க நினைத்​தால் தாராள​மாகத் தாக்​குங்​கள், ஆனால் வாக்​களித்த தமிழக மக்​களைத் தாக்​காதீர்​கள்” என திமுக​வினருக்கு தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பதிலடி கொடுத்​துள்​ளார்.இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறியிருப்பதாவது: “எங்​களை நீங்​கள் தாக்க நினைத்​தால் தாராள​மாகத் தாக்​குங்​கள், ஆனால் வாக்​களித்த தமிழக மக்​களைத் தாக்​காதீர்​கள். எங்​களை விமர்​சிக்க ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிக்​கும் உரிமை உண்​டு. அதற்​காக நாங்​கள் ஒரு​போதும் ஆத்​திரப்பட மாட்​டோம்.
ஆனால் தமிழக மக்​கள் வழங்​கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்​கவோ அவம​திக்​கவோ கூடாது. தமிழக மக்​கள் அரசி​யல் முதிர்ச்சி உடைய​வர்​கள்; அவர்​கள் புத்​திக் கூர்​மை​யுட​னும் தெளிவுட​னும் வாக்​களிப்​பவர்​கள். எங்​களது தலை​வர்​கள் அல்​லது எங்​களது கட்​சிக்கு எதி​ரான தனிப்​பட்ட விமர்​சனங்​களுக்கு பதிலளிக்​கக் கூடாது என்று நாங்​கள் விழிப்​புணர்​வுடன் முடிவு செய்​தோம்.
நாங்​கள் நினைத்​திருந்​தால், ஒரு தசாப்த கால​மாக முக்​கிய அமைச்​சரவை பதவி​களை​யும் அதி​காரத்​தை​யும் அனுப​வித்​து​விட்​டு, 2014 மக்​கள​வைத் தேர்​தலில் இழைக்​கப்​பட்ட மாபெரும் துரோகத்தை அனை​வருக்​கும் நினை​வூட்​டி​யிருக்க முடி​யும். ஆனால் நாங்​கள் அதைச் செய்​ய​வில்​லை.தமிழக வரலாற்​றில் அவர்​கள் (தி​முக) ஒரு​போதும் மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​த​தில்லை (தொடர்ந்து இரண்​டாவது முறை ஆட்சி அமைத்​த​தில்​லை) என்​பதை நன்​றாக அறிந்​திருந்​தும், எங்​களுக்கு வெற்றி வாய்ப்​பு​கள் இருந்​த​போ​தி​லும் அந்த கூட்​ட​ணி​யில் இணைந்​தோம். மக்​களின் தீர்ப்பை பணிவுட​னும் பெருந்​தன்​மை​யுட​னும் மதிப்​பதே எங்​கள் கோட்​பாடு’’ எனத் தெரி​வித்​துள்​ளார்.புதிய மாற்றத்தை விரும்பினர்இதே​போல் கிருஷ்ணகிரி முன்​னாள் எம்பி செல்​ல​கு​மார், “அவர்​கள் தரம் தாழ்ந்து போய்​விட்​டார்​கள் என்​ப​தற்​காக காங்​கிரஸ் தரம் தாழ்ந்து போய்​விட முடி​யாது. ஒவ்​வொரு​வரும் தங்​களு​டைய ஆழ்​மன​தில் என்ன இருக்​கிறதோ அதைத்​தான் வார்த்​தைகளாக வெளிப்​படுத்​து​வார்​கள்.