Home செய்திகள் உலக செய்திகள் ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரான்

ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரான்

ஹார்முஸ்கான், ஜூன் 1- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தின் சிரிக் தீவில் (Sirik Island) உள்ள தொலைத்தொடர்பு டவர் (Telecoms Tower) ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கை நடந்த அடுத்த ஒரு மணிநேரத்தில், பழிவாங்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய முக்கிய விமானப்படைத் தளம் (Airbase) மீது ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் மூலம் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1 மணிநேரத்தில் அதிரடி தாக்குதல் ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, அமெரிக்க ராணுவத்தின் இந்தத் திடீர் தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பின் விண்வெளி வான்படைப் பிரிவு (Aerospace Force) உடனடியாகக் களம் இறங்கியுள்ளது. டெலிகாம் டவர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு எந்த விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்தியதோ, அதே தளத்தை இலக்காகக் கொண்டு ஈரானிய போர்விமானங்கள் தங்களின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.